முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 30 مايو 2023

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு - Chief Minister Mr. M. K. Stalin's announcement Press release

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

சேலம் மாவட்டம். முனியப்பன் கோவில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன், த/பெ.சுபாஷ் (வயது 15) மற்றும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரித்திஷ், த/பெ.தங்கராசு (வயது 8) ஆகிய இரண்டு சிறுவர்களும் இன்று (30-5-2023) விருத்தாசம்பட்டி கிராமம். முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.