10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 مايو 2023

10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை

10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை!

மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளியாகும்.

தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை ( 19.05.2023 ) காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல்நிலை முதலாமாண்டிற்கும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும் பகுப்பாய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.