02.06.2023 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணைகள் - 02.06.2023 Friday Local Holiday - District Collector's Process Orders
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 2 உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 02.06.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி ((Negotiable Instrument Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணைகள்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.