நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 5 أبريل 2023

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றிற்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. www.kalviseithiofficial.com அதேபோல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும், கூடுதல் தகவல்களுக்கு nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.