பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு Instructions to teachers to survey school cella children
பள்ளி செல்லா குழந்தைகளை, இம்மாதம் இரண்டாம் வாரம் முதல் கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்த, தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் இளம்பகவத் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், 18 வயது வரையுள்ள மாணவர்களில், பள்ளிகளுக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் குறித்து, ஆசிரியர்கள் வழியே, கள ஆய்வு நடத்தி கணக்கெடுக்க வேண்டும்.
ஏப்ரல் இரண் டாம் வாரம் முதல் மே இறுதி வரை கணக்கெடுக்கலாம்.
பள்ளி செல்லாத மாணவர்களை, மாவட்ட கலெக்டர் அலுவலக உதவியுடன், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும், அவர்களை பள்ளிக்கு வரவைக்கவும், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு!
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.