வினாத்தாளுக்கு கட்டணம் வசூல் Charge for Question Paper - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 19 أبريل 2023

வினாத்தாளுக்கு கட்டணம் வசூல் Charge for Question Paper

சிவகங்கையில் 6 முதல் 9 ம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அச்சடிக்க மாணவரிடம் ரூ.80 வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. b இம்மாவட்டத்தில் ஏப்., 18 முதல் 28 வரை 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடக்கிறது. வினாத்தாள் தயாரிக்க இது வரை நடத்திய தேர்வுகள் உட்பட 5 தேர்வுகளுக்கு பாடவாரியாக வினாத்தாளுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஒரே மாதிரியான வினாத்தாட்கள் தயாரித்த போதும், ஒன்றியம் வாரியாக மாணவர்களிடம் வினாத்தாள் அச்சடிப்பு கட்டணம் தலா ரூ.55 முதல் 80 வரை வேறுபாட்டுடன் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியர்கள் கூறியதாவது,

அரசு, கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கின்றனர். ஆனால், வினாத்தாள்கள் தயாரிக்க கட்டணம் வசூலிப்பது வேடிக்கையாக உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்திற்கு அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. அந்நிதியில் வினாத்தாளுக்கு செலவழிக்கலாம், என்றனர். முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் கூறியதாவது, மாணவரிடம் ரூ.65 மட்டுமே வசூலிக்க கூறியுள்ளோம். அதை விட கூடுதலாக வசூலித்தால், திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.