ரமலான் தேதியில் வரும் தேர்வை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 9 أبريل 2023

ரமலான் தேதியில் வரும் தேர்வை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்

ரமலான் தேதியில் தேர்வை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்

ரமலான் பண்டிகையில் தேர்வு - தேதியை மாற்ற வலியுறுத்துதல்

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.....

இந்தியாவில் பல சமூகத்தைச் சார்ந்த, பல கொள்கை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றார்கள். இது மத சார்பற்ற நாடாகும். அனைவருடைய கொள்கையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சாசன சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெரு நாட்களுக்கும் அரசு விடுமுறை வழங்குகின்றது. ஒன்று, ரமலான் பண்டிகை மற்றொன்று, பக்ரீத் பண்டிகை. பள்ளிக் கல்வித்துறை சார்பாக தற்போது 6,7,8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டுள்ள அந்தத் தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய ஒரு சூழல் உள்ளது. ரமலான் பண்டிகை பிறை தென்படுவதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது.

இதன்படி ஏப்ரல் மாதம் 21-ம் தேதி அல்லது 22-ம் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது. பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இதன்மூலம் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் மனநிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் 21-ம் தேதி அல்லது 22-ம் தேதி ஆகிய இந்தக் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.