உடற்கல்வி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
சென்னை, ஏப். 11: உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி நிர வல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் கலந் தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப் பட்ட சுற்றறிக்கை: கடந்த ஆக.1-ஆம் தேதி நிலவரப்படி அர சுப் பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையின்படி உடற் கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் நிர்ணயம் செய்யப் பட்டன. அதில் 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது.
உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு விதிகளின்படி பணிநிரவல் செய்வதற்கான மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.11) நடத்த திட்டமிடப்பட்டது.
தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பணி நிரவல் கலந் தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மாற்று தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.