ஆசிரியர்களை அலற விடும் பெண் அதிகாரி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 6 أبريل 2023

ஆசிரியர்களை அலற விடும் பெண் அதிகாரி!



''ஆய்வுன்னு சொல்லி, ஆசிரியர்களை அசிங்கமா பேசுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''சென்னை - திருப்பதி போற வழியில இருக்கிற மாவட்டத்துல, தொடக்க கல்வி அதிகாரியா, ஒரு பெண் இருக்காங்க... இவங்க அரசு பள்ளிகள்ல, அடிக்கடி ஆய்வுக்கு போறாங்க.

''அப்ப, மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துறாங்கன்னு பார்க்காம, ஆசிரியர்களை நோண்டி நொங்கெடுக்கிறாங்க..''உதாரணமா, 'நோட்ஸ் ஆப் லெசன் கொண்டு வாங்க'ன்னு கேட்டு வாங்கிட்டு, 'என்ன இது, உங்க கையெழுத்து இவ்வளவு கேவலமா இருக்கு... நீங்க மட்டும் நல்லா, 'மேக்கப்' போட்டுட்டு வர்றீங்க, கையெழுத்து அழாக இருக்க வேண்டாமா'ன்னு கேட்டு, நோட்சை துாக்கி கடாசுறாங்க.. ''மாணவர்கள் முன்னாடியே ஆசிரியர்களை அவமானப்படுத்துறதால, அந்தம்மா ஆய்வுக்கு வர்றாங்கன்னு தெரிஞ்சாலே, ஆசிரியர்கள் அலறுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அப்போது, ஒலித்த மொபைல் போனை குப்பண்ணா எடுத்து, ''சொல்லுங்கோ மோகனா மேடம்... திருவள்ளூர்ல, போன காரியம் முடிஞ்சிடுத்தா...'' என, பேசியபடியே நடக்க, மற்றவர்களும் புறப்பட்டனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.