ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 14, 2023

ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங்

ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங் - Teacher Transfer Counseling in May

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது.

தமிழகத்தில் 24 ஆயிரம் தொடக்க பள்ளிகளில் 62 ஆயிரம், 7000 நடுநிலை பள்ளிகளில் 50 ஆயிரம், 6000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தர பணியில் உள்ள இவர்களுக்கும் 10 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தனித்தனியாக நடத்தப்படும்.

ஓராண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு, பணிமூப்பு மற்றும் முன்னுரிமை சலுகைகள் அடிப்படையில், விரும்பும் ஊர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும்.

இதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் முன்பே மே மாதத்தில் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக இருக்கும் பணியிட விபரங்களை பட்டியலாக தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.