TNPSC DEO Exam 2023 - ஹால் டிக்கெட் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 أبريل 2023

TNPSC DEO Exam 2023 - ஹால் டிக்கெட் வெளியீடு

DEO Exam 2023 - ஹால் டிக்கெட் வெளியீடு - TNPSC DEO Exam 2023 - Hall Ticket Release

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிக்கான தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. அறிவிப்பின் படி, மாநிலத்தில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய படிநிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, முதல்கட்ட எழுத்துத்தேர்வானது வரும் ஏப்ரல் 20ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வர்களுக்கான நுழைவு சீட்டு www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேவையான விவரங்களை பதிவு செய்து நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD HALL TICKET

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.