ஏப்.11-இல் கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 2 أبريل 2023

ஏப்.11-இல் கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

ஏப்.11-இல் கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

திருச்சி, ஏப். 2: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்.11ஆம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவுள்ள தாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக் டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் மற்றும் உயர்மட் டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாஸ், தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் துறை சங்க நிர் வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தொகுப்பூதியப் பணியாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்தை வாங்குவதால் அவுட்சோர்சிங் நியமனங்களை முன் னெடுப்பதற்கான முன்மொழிவுகளை தமிழக முதல்வர் முன்னிலை யில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது கண்டனத்துக்கு ரியது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஏற்கெனவே அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஏப்.6ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் கூட்டம் நடத்தப்படும். இக் கூட்டத்தில், ஏப்.7, 8, 9 -களில் அந் தந்த மாவட்ட எம்எல்ஏ, எம்பி-க்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக் கும் இயக்கத்தை நடத்துவது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ் வாதாரக் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், வரும் ஏப்.11ஆம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது, எடுக்கப்பட்ட முடிவுகளை களத்தில்தீவிர மாக அமல்படுத்தி தமிழகம் முழுதும் அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் பணி யாற்றுவது என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.