உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 1 أبريل 2023

உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்

உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம் - Higher Education Order appoints Geetha as Director of College Education, Tamil Nadu

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனராக, திரு.வி.க.. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை நியமித்து தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரிக் கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த பூர்ணசந்திரன், கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால். அவருடைய நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி உயர்கல்வித் துறையால் பூர்ணசந்திரன் நியமனம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த ஈஸ்வர மூர்த்தியை, முழு கூடுதல் பொறுப்பு கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்து, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி, அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குனராக இருந்து வந்த ஈஸ்வரமூர்த்திக்கு பதிலாக, திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜி.கீதாவை நியமித்து, உயர்கல்வித் துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.