நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.2.7 கோடி நன்கொடை - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு! - Foxconn donates Rs 2.7 crore to Namma School, Namma Uru School Project - School Education Commissioner's Press Release!
செய்திக் குறிப்பு
பள்ளிக் கல்வித் துறையின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்திற்குஃபாக்ஸ்கான் குழுமத்தைச் சேர்ந்த காம்படிஷன் டீம் டெக்னாலஜி (இந்தியா) ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் 2.7 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கென சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து இந்த நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா ஐ.ஏ.எஸ் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 27 கோடிக்கான காசோலை கையளிக்கப்பட்டது.
"அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கென நன்கொடை அளிப்பதில் மகிழ்கிறோம்.
கல்வியில் மேம்பாடு என்பது சமூக மேம்பாட்டிற்கான முதல் படி" என்றார்
இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர். இந்த நிதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படும். "ஃபாக்ஸ்கான் குழுமத்திற்கு நன்றி தெரியித்துக் கொள்கிறேன். இத்தகைய நன்கொடைகள் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மேம்படும்" என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.