10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு - பாஜக தலைவர் கைது: போலீசார் அதிரடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 5 أبريل 2023

10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு - பாஜக தலைவர் கைது: போலீசார் அதிரடி



10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு - பாஜக தலைவர் கைது: போலீசார் அதிரடி

10-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வானது நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற 10-ம் வகுப்பு இந்தி பாடத்துக்கான வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியது. இதனை கண்டதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹனம்கொண்டா மாவட்டம் கமலாபூரில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாள் கசிந்தது உறுதியானது.

எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றின. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அச்சமயம், பாஜக பிரமுகர் பரம் பிரசாந்த் என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரசாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, பண்டி சஞ்சயை தெலுங்கானா போலீஸ் கைது செய்தது. பிரசாந்திடம் பண்டி சஞ்சய் பேசியதற்கான ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னை வேண்டுமென்றே கைது செய்திருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு பண்டி கடிதம் எழுதினார்.

கடிதத்தில், அரசியல் சாயம் பூசுவதற்காக தன்னை கைது செய்துள்ளதாகவும், எந்த வித நோட்டீசும் வழங்காமல், முன்னறிவிப்பு இல்லாமல் கைது செய்துள்ளதாகவும் பண்டி சஞ்சய் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே மாநிலம் முழுவதும் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பண்டி சஞ்சய் பகிர்ந்துள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.