நகல் குடும்ப அட்டை பெற, இனி வட்ட வழங்கல் அலுவலகம் நேரில் செல்லத் தேவையில்லை - ஆன்லைன் மூலம் ரூ.45 செலுத்தினால் வீடு தேடி வரும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 7 أبريل 2023

நகல் குடும்ப அட்டை பெற, இனி வட்ட வழங்கல் அலுவலகம் நேரில் செல்லத் தேவையில்லை - ஆன்லைன் மூலம் ரூ.45 செலுத்தினால் வீடு தேடி வரும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

பொதுவிநியோகத் திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணியினைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் ரொக்கப் பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சீ. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15,000/-ம், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பி. நந்தினி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000/-ம், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஆர். மதுபாலன் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000/-ம், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட எடையாளர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. டி.பாபு அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-ம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எஸ். ராஜன் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.6,000/-ம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. டி. துரைராஜ் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.4,000/-ம் நற்சான்றிதழ்களும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இன்று (05.04.2023) வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. கே ஆர்.பெரிய கருப்பன் அவர்களும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்களும் முன்னிலை வகித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.