பழைய, புதிய பென்ஷனுக்கு (OPS & NPS& CPS) மத்தியில் உருவாகிறது உத்தரவாத பென்ஷன் திட்டம்..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 13 مارس 2023

பழைய, புதிய பென்ஷனுக்கு (OPS & NPS& CPS) மத்தியில் உருவாகிறது உத்தரவாத பென்ஷன் திட்டம்..!

பழைய, புதிய பென்ஷனுக்கு (OPS & NPS& CPS) மத்தியில் உருவாகிறது உத்தரவாத பென்ஷன் திட்டம்..!

2003-ம் ஆண்டு மற்றும் அதற்குமுன் அரசுப்பணிக்கு வந்தவர்கள் பழைய பென்ஷன் பெறத் தகுதியானவர்களாக உள்ளனர். 2004-ம் ஆண்டு முதல் பணிக்கு வ ந்த ஊழியர்களுக்குப் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.அண்மைக் காலமாக, ‘எங்களுக்கும் பழைய பென்ஷன் வேண்டும்’ என்கிற கோரிக்கையை 2004-க்குப்பிறகு அரசு வேலைக்கு சேர்ந்தவர்கள் எழுப்பி வருகின்றனர். 2023-24-ல் பல மாநில சட்டமன்றங்களுக்குப் பொதுத் தேர்தல், 2024 ல் இந்திய நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் என வரிசையாக தேர்தல்கள் வரவிருக்கின்றன. மீண்டும் பழைய பென்ஷனுக்குத் திரும்புவது நிதிப் பேரிடருக்கு வழிவகுக்கும் என மத்திய அரசாங்கம் நினைப்பதால், இந்தப் பிரச்னையை சுமூகமாகத் தீர்க்கிற மாதிரியான ஒரு தீர்வைத் தரமுடியுமா என யோசித்து வருகிறது. அந்தத் தீர்வு என்னவெனில், பழைய பென்ஷனும் புதிய பென்ஷனும் அல்லாத, அதே சமயம் உத்தரவாத பென்ஷன் தரும் வகையில் பென் ஷன் திட்டம் ஒன்றை உருவாக்குவதுதான். இந்த பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

பழைய, புதிய பென்ஷனுக்கு மத்தியில் உருவாகிறது உத்தரவாத பென்ஷன் திட்டம்..! பழைய பென்ஷன்...

ஓ.பி.எஸ் (Old Pension System) எனப்படும் பழைய பென்ஷன் திட்டம், மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் 2003-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தன. பழைய பென்ஷன் திட்டப்படி, ஓய்வு பெறும் ஊழியர், தனது கடைசி சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாகப் பெறலாம். பென்ஷனுக்கு அகவிலைப்படியுடன் மருத்துவப்படியும் உண்டு. ஓய்வு பெறும்போது தரப்படும் பென்ஷன் சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி உயரவும் செய்யும். இதற்காக ஊழியர் தனது பங்களிப்பாக பணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், பணிக் கொடையுடன், பி.எஃப் (General Provident Fund) வசதியும் உண்டு. புதிய பென்ஷன் திட்டம்...

ஜனவரி 2004 முதல், ராணுவம் தவிர்த்த அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திய மத்திய அரசு. பணியில் உள்ள ஊழியர் தனது ஓய்வுக்கால பென்ஷனுக்காக தனது சம்பளம் + அகவிலைப்படியில் 10% தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் அடிப்படை. மத்திய அரசைத் தொடர்ந்து நம் நாட்டில் உள்ள 26 மாநில அரசுகளும் படிப்படியாக என்.பி.எஸ் திட்டத்தை செயல்படுத்தின.

இணை பங்களிப்பு...

ஆரம்பத்தில் 10 சதவிகிதமாக இருந்த பென் ஷனுக்கான இணை பங்களிப்பை 2019 முதல் 14% என உயர்த்தியது மத்திய அரசு. 15 மாநில அரசு கள் தற்போது 14% தொகையை தங்களது இணை பங்களிப்பாகச் செலுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின்படி, ஓய்வு பெறும் ஊழியர் ஒருவர், அரசு மற்றும் தான் செலுத்திய சந்தா மற்றும் சந்தை வளர்ச்சி மூலமான மொத்தத் தொகையில் 60% தொகையை ரொக்கமாகப் பெறலாம். மீதமுள்ள 40% தொகையை அரசு நியமித்துள்ள முகவர்கள், முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் பென்ஷனாகப் பெறலாம்; பணிக்கொடையும் உண்டு.

என்.பி.எஸ் குறைபாடுகள்...

என்.பி.எஸ் திட்டத்தின்படி கிடைக்கும் (Annuity) பென்ஷன், ஓய்வு பெற்ற ஊழியர் பெற்றிருந்த கடைசி சம்பளத்தில் 50% அளவுக்கு இருக்காது. மாறாக, 35% என்கிற அளவில்தான் இருக்கும். இந்தத் தொகைக்கும் உத்தரவாதம் கிடையாது. அது மட்டுமல்ல, சம்பள கமிஷன் பரிந்துரைப்படி பென்ஷன் உயராது. பிராவி டன்ட் ஃபண்ட் வசதி இல்லை. இந்தக் குறை களுக்கான தீர்வாக உத்தரவாத பென்ஷன் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கான ஃபார்முலாவின்படி, ஓய்வு பெறும் ஊழியருக்கு அவரது 10% பென்ஷன் பங்களிப்பில் 41.7% தொகையை ஓய்வு பெறும்போது மொத்தத் தொகையாக தர வேண்டும். மீதமுள்ள 58.3% பங்களிப்பு நிதி யத்தை (Annuities) பென்ஷனுக்கு முதலீடு செய்தால், என்.பி.எஸ் பென்ஷன் மூலம் கிடைக்கும் தொகை ஊழியரின் கடைசி சம்பளத்தின் 50 சதவிகித மாக இருக்கும் என்று உத்தரவாத பென்ஷன் திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்த அரசு உயரதிகாரி தெரிவித்துள்ளார். பற்றாக்குறை

இந்த ஃபார்முலாவின்படி, கிடைக்கும் தொகை 50 சதவிகி தத்துக்கும் குறையும் எனில், அவ்வாறு குறையும் தொகையை ஈடுகட்டி, 50 சதவிகிதத்துக்கும் குறையாமல் பென்ஷன் வழங்க, அரசு அந்தப் பற்றாக்குறை நிதியை வழங்க வேண்டும் என்பது ஒரு வழி. இதற்கு வேறொரு வழியையும் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். அதாவது, என்.பி.எஸ்-ன் சந்தை வளர்ச்சி 10% என்ற அளவில் உள்ளது. ஆனால், பென்ஷன் நிதியம் மூலமான வளர்ச்சி 5% - 6% என்ற அளவிலேயே உள்ளது. எனவே, நிதியத்தை என்.பி.எஸ் பென்ஷன் நிதியத்துக்கு மாற்றாமல், என்.பி.எஸ்-லேயே விட்டு வைத் தால் பற்றாக்குறையை சரிக்கட்டி விடலாம் என்பதும் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

பழைய, புதிய பென்ஷனுக்கு மத்தியில் உருவாகிறது உத்தரவாத பென்ஷன் திட்டம்..! 8-வது சம்பள கமிஷன் வந்தால்..? Visit - www.kalviseithiofficial.com தற்போதைய சம்பள நிலைகளுக் கேற்ப, ஊழியர் பெற்றிருந்த கடைசி சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாக இந்த ஃபார் முலாவின் படி வழங்க முடியும். ஆனால், எட்டாவது சம்பள கமிஷன் வந்தால், சம்பள நிலைகள் பெரிய அளவில் உயரும். அப்போது இந்த உத்தரவாத பென்ஷன் திட்டத்தை சமாளிக்க முடியுமா என்று கேட்டால், அதற்கும் ஒரு வழியைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

‘‘எட்டாவது சம்பள கமிஷன் மட்டுமல்ல, அதற்கடுத்த சம்பள கமிஷனும் வரலாம். ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகலாம். இதை எதிர் கொள்ள தற்போது 14 சதவிகிதமாக உள்ள அரசுத்தரப்பு பங்களிப்பை 16% என உயர்த்துவதன்மூலம் எதிர் கொள்ளலாம். 50% தொகையை பென்ஷனாக வழங்கலாம். 2004-ல் அரசுப் பணிக்கு வந்தவர்கள் 2036 வாக்கில் ஓய்வு பெறக்கூடும். சிலர் இயற்கையாக இறந்தும் போகலாம். ஓய்வுபெறும் பென்ஷன்தாரர்கள், அவர்களின் துணைவியார் இறந்து போவது என சுமார் 7% பேரின் பென்ஷன் தொகை அரசுக்குத் திரும்ப வரும் எனலாம். இந்தக் தொகை பற்றாக்குறையை சமாளிக்க அரசுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.

நிர்வகிப்பது யார்?

தற்போதைய என்.பி.எஸ் திட்டமானது ‘பென்ஷன் நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தாலேயே’ நிர்வகிக்கப்படுகிறது. இதே போல, பிரதமரின் வயவந்தனா யோஜனா திட்டத்தை எல்.ஐ.சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வயவந்தனாவில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சரிக்கட்ட மத்திய பட்ஜெட்டிலிருந்து ரூ.5,000 - ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2022 - 23 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.800 கோடி. இதே போல, உத்தரவாத பென்ஷன் திட்டத்தில் ஏற்படும் பற்றாக் குறைக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி கிடைக்க வாய்ப்புண்டு. தேர்தல் எதிரொலி

வரப்போகும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களை மனதில்கொண்டு, மக்களின் ஆதரவைப் பெற மத்திய அரசாங்கம் இந்த உத்தரவாத பென்ஷன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. பழைய பென்ஷனை மீண்டும் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அரசு தீர்மானித்தபின் அதற்கு மாற்றாக இந்த உத்தரவாத பென்ஷன் திட்டத்தை மத்திய விரைவிலேயே செயல்படுத்தத் தொடங்கலாம்!

மேற்கு வங்கமும், தமிழகமும்..!

இந்திய மாநிலங்கள் 2004-ம் ஆண்டிலேயே என்.பி.எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 19 ஆண்டுகளான பின்பும் மேற்குவங்க மாநில அரசு இன்னமும், அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் நிதிச்சுமைக் காரணமாக மேற்கு வங்கத்தில் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. 2016-க்குப் பிறகு இன்று வரை ஆறாவது சம்பள கமிஷன் அடிப்படையிலேயே ஊழியர்கள் ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசும் என்.பி.எஸ்-ல் சேராமல், சி.பி.எஸ். (Contributory Pension Scheme)திட்டத்தை 1.04.2003-க்குப்பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.‌

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.