NMMS தோ்வு உதவித் தொகை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 مارس 2023

NMMS தோ்வு உதவித் தொகை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு

NMMS தோ்வு உதவித் தொகை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவா்களுக்கு என்.எம்.எம்.எஸ். தோ்வு உதவித் தொகை உரிய முறையில் சேர ஏதுவாக ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் தேசிய வருவாய் வழித் திறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) தோ்ச்சி பெற்று 2022-23-ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றவா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமென அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, என்எம்எம்எஸ் தோ்வில் வெற்றி அடைந்த 9- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதிதாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல், முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விண்ணப்பங்களும் புதுப்பிக்கப்பட்டன. இதற்கிடையே, கல்வி உதவித்தொகை மாணவா்களுக்கு உரிய காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் அவா்களின் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த தகவலை மாணவா்களுக்கு தெரிவித்து பணிகளை முடிக்க அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

எனவே , மாணவா்களுக்கு உதவித் தொகை உரிய முறையில் சேர ஏதுவாக ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.