பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வெழுத மறுக்கப்பட்ட மாணவி தூக்கிட்டுத் தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 5 مارس 2023

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வெழுத மறுக்கப்பட்ட மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வெழுத மறுக்கப்பட்ட மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பரதாரி மாவட்டத்தில் வசித்துவரும் சூரஜ்முகி(14). இவர் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தாண்டு முடிவடைவிருக்கும் நிலையில், மாணவி சூரஜ்முகி தந்தையின் நிதி நெருக்கடி காரணமாக இதுவரை பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்புக்கான இறுதித்தேர்வு நடைபெற்று வந்தது. சரியான நேரத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் தேர்வெழுத அனுமதி மறுத்துள்ளது. தேர்வெழுத முடியாத மனவருத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இறந்த சிறுமியின் தந்தை அசோக் கங்வார், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்வெழுத அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும், அதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டுப் படித்ததாகவும், தற்போது அந்த கனவு கலைந்தது மட்டுமின்றி எங்கள் மகளும் இல்லை என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.