ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக்கவே ஆதார் - மின்சார எண் இணைப்பு? - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 7 مارس 2023

ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக்கவே ஆதார் - மின்சார எண் இணைப்பு? - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம்

ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக்கவே ஆதார் - மின்சார எண் இணைக்க வலியுறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் தவறானது - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

இது தொடர்பாக பரவும் கடிதம், பிரிவு அலுவலரின் தனிப்பட்ட கள ஆய்வு செயல்; அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே வீட்டில்/குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்து குறித்த அறிக்கை சமர்ப்பித்தல்:

எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட, களஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.