ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 13 مارس 2023

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டுகோள்



ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டுகோள்

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர் பழனிசாமி, மாநில இணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே ரத்து செய்து, பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.பகுதிநேர ஆசிரியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தடை ரத்து செய்ய வேண்டும்.பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வுகளை ஒளிவுமறைவின்றி மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய படி அகவிலைப்படி உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும், என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

هناك تعليق واحد:

  1. தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மேலும் தேர்தல் வாக்குறுதியின் படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.....
    அதேபோல் தேர்தல் வாக்குறுதியின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் செத்துப் போயிருவீங்களாடா பரதேசிங்களா.....

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.