வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
ஆந்திரத்தில் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த போதே வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், வகாவரி பாலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பி.வீரபாபு (45). இவர் இன்று வழக்கபோல் பள்ளியின் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்தவாறு குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே மரணமடைந்தார். ஆசிரியர் திடீரென அசைவின்றி இருப்பதை அறிந்த குழந்தைகள் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆம்புலன்ஸில் அங்கு விரைந்த சுகாதாரத்துறை ஊழியர் ஆசிரியரின் நாடித் துடிப்பைச் பரிசோதித்தார், ஆனால் ஆசிரியர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குழந்தைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் தற்போது இல்லை என்பதை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. மாணவர்களும் கதறி அழுதனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.