முழு ஆண்டு தேர்வு எப்போது: அரசு, தனியார் பள்ளிகள் குழப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 23 مارس 2023

முழு ஆண்டு தேர்வு எப்போது: அரசு, தனியார் பள்ளிகள் குழப்பம்

முழு ஆண்டு தேர்வு எப்போது: அரசு, தனியார் பள்ளிகள் குழப்பம்

ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வு நடத்துவது எப்போது என தெரியாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2வுக்கு இம்மாதம், 13ம் தேதியும்; பிளஸ் 1க்கு, 14ம் தேதியும் பொது தேர்வுகள் துவங்கின. வரும், 6ம் தேதி, 10ம் வகுப்புக்கு தேர்வுகள் துவங்க உள்ளன.'ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வு, ஏப்., 20ல் துவங்கும். தேர்வுகள், ஏப்.,28ல் முடிந்து, கோடை விடுமுறை விடப்படும்' என, பள்ளிக்கல்வி துறையின் ஆண்டு அட்டவணையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், வினாத்தாள் வழங்கப்படுமா என, தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதனால், அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தாங்களே வினாத்தாள் தயாரித்து, முன்கூட்டியே தேர்வுகளை நடத்த துவங்கி விட்டன. பல பள்ளிகளில், 20ம் தேதி முதல் தேர்வுகள் துவங்கி விட்டன.
தேர்வை நடத்தாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறையில் இருந்து எந்த அறிவிப்பும் வராததால், தேர்வை எப்போது நடத்துவது என, குழப்பம் அடைந்துள்ளனர்.முழு ஆண்டு தேர்வை, பள்ளிகளின் வினாத்தாள்களை வைத்தே நடத்தி கொள்ளலாமா; பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொதுவான வினாத்தாள் வழங்கப்படுமா; பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.