தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24 - ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 20.3.2023 - முடிவுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 20 مارس 2023

தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24 - ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 20.3.2023 - முடிவுகள்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 20.3.2023 - முடிவுகள்

தமிழக அரசின் 2023-24 ஆண்டிற்கான வரவு-செலவு குறித்த அறிக்கையில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளரகளின் பழைய பென்சன் உள்ளிட்ட முதல்வரின் வாக்குறுதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களை புறக்கணிக்கும் தமிழக அரசு.

2023-24ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையில் தமிழக அரசு முன்னெப்போதுமில்லாத அளவில் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு திமுக அரசு பதவியேற்றபோது இருந்த ரூ.62,000/- கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000/-கோடியாக குறைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொண்டுள்ளது.

கடினமாக சீர்திருத்தங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் கூறுவது அவரோ, அவருடைய அமைச்சர்களோ அல்லது அரசு செலவினங்களை குறைத்து வந்ததல்ல. நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களுக்கு வழங்கப்படாமரல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை, பணமாக ஈட்டிக்கொள்ளும் சரண்விடுப்புஉரிமையை பறித்ததாலும், அகவிலைப்படியை கடந்த மூன்று தவணையாக ஒவ்வொரு தவணையிலும் ஆறு மாதங்கள் தாமதப்படுத்தி வழங்கியதாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.. மேலும் வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டும் என்ற நிதி பொறுப்புடைமைச்சட்டத்தின் இலக்கை எட்டிட அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்புமின்றி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் (பக்கம் 5,6) குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை மேலும், மேலும் வஞ்சிப்பதுதான் ஆகும்.

இந்த பட்ஜெட் உரையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட முதல்வரின் வாக்குறுதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை மிகுந்த ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரே!

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சரின் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியம், வரையறுக்கப்பட்ட ஊதியம், கடந்த அரசால் பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் அறிவிப்புகளாக வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.