பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பல்வேறு துறைகளின் பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 مارس 2023

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பல்வேறு துறைகளின் பள்ளிகள்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பல்வேறு துறைகளின் பள்ளிகள்

சென்னை, மார்ச் 20: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறைபோன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த பள்ளிகள் அனைத் தும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.40,299 கோடி ஒதுக்கீடு: நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: அரசுப் பள்ளிக ளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிய கட்டடங்கள் கட்டவும் ரூ.7,000 கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட் டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை கள் என மொத்தம் ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் படும். எண்ணும் எழுத்தும் திட்டம்: 2025-ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப் படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் ரூ.110 கோடி செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக் கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். முதல்வர் தலைமையில் 2021 ஆகஸ்ட் 19, 2022 ஏப்ரல் 12 ஆகிய நாள் களில் நடைபெற்ற தமிழக அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற் றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி களை பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டன.

கல்விப் பெருவழியில் அரசின் லட்சியமான சமூகநீதியை அடைந் திட, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபினர் நலத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத் துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற் றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்ப டும்.

கல்வி உதவித் தொகை இணையதளம்: தகுதிவாய்ந்த மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப் பரிமாற்ற முறையில், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையத ளம் ஒன்று உருவாக்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.