அரசு பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 مارس 2023

அரசு பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

அரசு பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் களுக்கு, தகுதி தேர்வு (டெட்) எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநில செயற் குழு கூட்டம், நாமக்கல்லில் நடை பெற்றது. மாநில தலைவர் செல்லையா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய் மாண்ட் முன்னிலை வகித்தார்

மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார் கண்ட், பஞ்சாப் மாநில அரசுகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. அந்த நடைமுறையை பின்பற்றி, தமிழக அரசும், தேர்தல் அறிக்கை யில் தெரிவித்தபடி, 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் நலனை கருத்தில் கொண்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.