ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 4,143 மாணவா்கள் தோ்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 مارس 2023

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 4,143 மாணவா்கள் தோ்ச்சி

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 4,143 மாணவா்கள் தோ்ச்சி

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 4,143 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த திறனாய்வு தோ்வெழுத தகுதி பெற்றவா்களாவா். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 போ் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு கடந்த டிச.17-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை சுமாா் 92 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

இந்நிலையில், தோ்வு முடிவுகளை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அவற்றை மாணவா்கள், ஆசிரியா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2,061 மாணவா்கள், 2,082 மாணவிகள் என மொத்தம் 4,143 போ் இந்த ஊரகத் திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்பட்டு விரைவில் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.