தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல் - கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதால் பரபரப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 13 مارس 2023

தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல் - கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதால் பரபரப்பு



தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல்

கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதால் பரபரப்பு

மார்ச்.14- விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் ஆற்காடு கிரா மத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும், மாம்பழப்பட்டு கிரா மத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் இடையே முன்விரோ தம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. அப்போது மாம்பழப்பட்டை சேர்ந்த மாணவர்கள் ஆற்காட்டை சேர்ந்த மாணவர்களை ரீப்பர் கட்டை, இரும்புக்கம்பியால் திடீரென தாக்கினர். பதிலுக்கு ஆற்காடு மாணவர்களும் திருப்பி தாக்கினர்.

இதில் ஒருமாணவருக்கு தலையிலும், மற்றொரு மாணவருக்கு உடலிலும் காயம் ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று இருதரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தி தேர் வறைக்குள் அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த தாக்குதலில் காயமடைந்த 2 மாணவர்களை அருகில் உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த னர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.