தொழிலாளர்‌ நல நிதி செலுத்தும்‌ தொழிலாளர் இயற்கை மரணமடைந்தால் உதவித்‌ தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 مارس 2023

தொழிலாளர்‌ நல நிதி செலுத்தும்‌ தொழிலாளர் இயற்கை மரணமடைந்தால் உதவித்‌ தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியீடு

தமிழ்நாடு தொழிலாளர்‌ நல வாரியம்‌ - தொழிலாளர்‌ நல நிதி செலுத்தும்‌ தொழிலாளர் இயற்கை மரணமடைந்தால், இயற்கை மரணஉதவித்‌தொகை வழங்கும்‌ திட்டம்‌ - உதவித்‌ தொகையினை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்படுகிறது
ஆணை:

மேலே படிக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் மரணமடைந்தால், இயற்கை மரண உதவித் தொகையினை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் கோரியுள்ளார்.

2. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில், தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரண உதவித் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50.000/- ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசு ஆணையிடுகிறது. மேலும், இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நல நிதியிலிருந்து மேற்கொள்ளவும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஆணையிடுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.