நான் முதல்வன் திட்டம் - மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் (18.03.2023 அன்று) ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் குறித்து தகவல் தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 مارس 2023

நான் முதல்வன் திட்டம் - மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் (18.03.2023 அன்று) ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் குறித்து தகவல் தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடல் சார்பு

விருதுநகர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் : 17.03.2023

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - விருதுநகர் மாவட்டம் - உயர் கல்வி வழிகாட்டுதல் - நான் முதல்வன் திட்டம் - மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் குறித்து தகவல் தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடல் சார்பு.

இப்பயிற்சியானது காலை 09.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக தங்கள் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து உரிய நேரத்தில் அவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நான் முதல்வன் திட்ட பயிற்சிகளில் முதன்மைக் கருத்தாளர்களாக செயல்படும் முதுநிலை விரிவுரையாளர் / விரிவுரையாளர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் 18.03.2023 அன்று நடைபெற உள்ள இப்பயிற்சியில் மேல்நிலை வகுப்புகளில் இயற்பயில் மற்றும் பொருளியில் பாடங்களை கையாளும் ஆசிரியர்கள் மட்டும் ஆண்டு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளதால் கலந்து கொள்ள வேண்டியதில்லை. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு மதியு உணவு வழங்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.