பொது தேர்வு ஹால் டிக்கெட் - தலைமை ஆசிரியர், அதிகாரிகளுக்கு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 مارس 2023

பொது தேர்வு ஹால் டிக்கெட் - தலைமை ஆசிரியர், அதிகாரிகளுக்கு உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு, இன்றுடன் முடிகிறது. 'மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க, எந்த நன்கொடையும் வசூலிக்க கூடாது' என, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், வரும் 13, 14ல் துவங்குகின்றன. இந்த வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு, 1ம் தேதி முதல் நடந்து வந்தது; இன்று முடிகிறது.

இதையடுத்து, நாளை ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 'ஹால் டிக்கெட் வழங்குவதற்கு, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. 'பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்றோ, பள்ளி நன்கொடை என்றோ, எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்க கூடாது' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.