ஆசிரியர்களை அவமதிக்கும் “வாத்தி”? – ஆசிரியர்கள் முதல்வருக்கு வைத்த கோரிக்கை! A "goose" that insults teachers? - Teachers' request to the principal!
தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள படம் ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள அந்த மனுவில், சமூகத்தில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு பாடத்தையும் ஒழுக்கத்தையும் கற்று தந்து சிறந்த மனிதனாக மாற்றும் சமூக செயல்பாட்டில் உள்ள ஆசிரியர்களை கொச்சையான வார்த்தையில் ‘வாத்தி’ என்று அழைப்பது ஆசிரியர்களை மனவேதனைக்கு உள்ளாக்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படத்தின் பெயரை நல்ல தமிழில் ‘வாத்தியார்’ என்றோ அல்லது தெலுங்கில் உள்ளது போல ‘சார்’ என்றோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.