TNPSC - இன்று‌ (25.02.23) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 فبراير 2023

TNPSC - இன்று‌ (25.02.23) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

25.02.2023 அன்று நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி-II/IIA) முதன்மைத் தேர்வு - தேர்வு நேரம் குறித்த செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 15/2023

நாள்: 25.02.2023

செய்தி வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -2 (தொகுதி-2 &2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25.02.2023 முப & பிப) 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்.

அஜய் யாதவ் இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.