அரசு பள்ளி ஆசிரியர் செய்கிற காரியமா இது?: போலீஸில் புகார் கொடுத்த காங்கிரஸ் கட்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 فبراير 2023

அரசு பள்ளி ஆசிரியர் செய்கிற காரியமா இது?: போலீஸில் புகார் கொடுத்த காங்கிரஸ் கட்சி

அரசு பள்ளி ஆசிரியர் செய்கிற காரியமா இது?: போலீஸில் புகார் கொடுத்த காங்கிரஸ் கட்சி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பேனரைக் கிழித்த அரசு பள்ளி ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளராக செயல்படுபவர் வெங்கடாஜலபதி. இவர் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பொதிகை நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தாகூர் கல்லூரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவிற்காக லாஸ்பேட்டை விமான சாலை உள்ளிட்ட சில இடங்களில் கட்சித் தலைவர்களை வரவேற்று வெங்கடாஜலபதியின் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை விமான சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இதனை நேற்று காலை பார்த்த வெங்கடாஜலபதி, அருகே உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தார்.

அப்போது வெங்கடாஜலபதி வசிக்கும் பொதிகை நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பவர் காங்கிரஸ் கட்சியின் பேனர்களைக் கிழித்தது தெரிய வந்தது. இந்த பேனரை திட்டமிட்டே அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் கிழித்ததாக வெங்கடாஜலபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வெங்கடாஜபதியின் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பேனரை அரசு பள்ளி ஆசிரியர் கிழிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.