சிவராத்திரி நாளில் பயிற்சி வகுப்பு மாற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 12, 2023

சிவராத்திரி நாளில் பயிற்சி வகுப்பு மாற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவராத்திரி நாளில் பயிற்சி வகுப்பு மாற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மகா சிவராத்திரி நாளன்று நடக்கவுள்ள பயிற்சி வகுப்புகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி, 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிப்பது குறித்து இப்பயிற்சியில் விளக்கப்படும்.

இதேபோல, இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கும், புத்தாக்க பயிற்சியை, வரும் 18ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியன்று வழிபாட்டு தலங்களுக்கு செல்வதால், ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் திரிலோகசந்திரன் கூறியதாவது:

வட்டார வள மைய பயிற்சி, மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மூன்றாம் பருவ பாடத்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக கற்பித்தல் குறித்த பயிற்சி, வரும் 25ம் தேதி மாற்றி அறிவிக்கலாம்.

முக்கிய தினங்களில் பயிற்சி வகுப்பு நடத்தி, ஆசிரியர்களை அலைகழிக்காமல் இருக்க, ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.