போட்டித் தேர்வு: ரத்து கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 فبراير 2023

போட்டித் தேர்வு: ரத்து கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

போட்டித் தேர்வு: ரத்து கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை:ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய கோரி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர் பணியில் சேர, பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆண்டுகளாக, இந்த நடைமுறை உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு மட்டும், ஆசிரியர் தகுதித் தேர்வுடன் கூடுதலாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள, பணி நியமன போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.

இதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தி.மு.க., அரசு அமைந்த பின், தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் நல கூட்டமைப்பினர், 11 முறை போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.