மழலையா் வகுப்புக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மழலையா் வகுப்புக்கான நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் சமக்ரஹ சிக்ஷா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீடு ஏழை மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான கல்விச் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, மாநில அரசு வழியாக செலுத்தி வருகிறது.
2021-22 ஆம் ஆண்டு ரூ.1, 598 கோடியும், 2022-23 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரையில் ரூ. 1,421 கோடியும் , மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தமிழக பள்ளிகளுக்கு மழலையா் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி என்ன ஆனது?.
திமுக அரசு, ஏழை எளிய மாணவா்கள் கல்வி பெறுவதை தடுக்க முயற்சிக்காமல், உடனே பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளாா் அவா்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.