பாடப்புத்தகத்தை பதிவு செய்ய வேண்டும்
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா பாட புத்தகங்கள் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என தொழிற்கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தொழிற்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 இலக்க ஆசிரியர் எண்ணை பயன்படுத்தி தமிழ்நாடு பள்ளி கல்வி துறை செயலியை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரத்தினை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு சிஇஓ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.