முதல்வர் உடன் எடுத்த புகைப்படங்களை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் செய்த சேட்டைகள் - அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கல்வி அலுவலகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 12 فبراير 2023

முதல்வர் உடன் எடுத்த புகைப்படங்களை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் செய்த சேட்டைகள் - அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கல்வி அலுவலகம்

முதல்வர் உடன் எடுத்த புகைப்படங்களை வைத்து அரசு பள்ளி ஆசிரியர் செய்த சேட்டைகள் - அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கல்வி அலுவலகம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதல் மைல் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அருண்குமார் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கல்வி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் சக ஆசிரியரிடம் மிரட்டு விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் மீது பத்துக்கு மேற்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை செய்ததில், இவர் தொடர்ந்து சரி வர பள்ளிக்கு செல்லாமல் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் மிரட்டும் விதமாக நடந்ததும் உறுதியானது. இதனை தொடர்ந்து இவரை பணியிட நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்

CLICK HERE TO WATCH THE VIDEO

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.