போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது: பொய்யான குற்றச்சாட்டு என பெற்றோர், மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 14 فبراير 2023

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது: பொய்யான குற்றச்சாட்டு என பெற்றோர், மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு

Teacher arrested under POCSO Act: Parents, students petition Collector as false accusation - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது:

பொய்யான குற்றச்சாட்டு என பெற்றோர், மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு
பூவாளூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரை சந்தித்து கொடுத்த மனுவில், பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சதீஷ்குமார் மீது தற்போது கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றமானது முற்றிலும் பொய்யானது. இந்த பள் ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரு கிறார்கள். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பிலும், பொதுநல னிலும் மிகவும் அக்கறை கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்து உதவும் அந்த ஆசிரியர் மீது அவருடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் குற்றச்சாட்டை சுமத்தி இந்த செயலை செய் துள்ளனர். 14 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் அந்த ஆசிரியர், பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து கொடுத் துள்ளார். நல்லாசிரியர் விருது மற்றும் பல விருதுகள் பெற்றுள்ள ஆசிரியரை விரைவில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.