அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 19, 2023

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்!

Subsidy for Government Aided Schools: Education Department Important Instruction!

சென்னை, பிப். 18: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிகாட்டுதல் கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் நிகழ் கல்வியாண்டு திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகளின்படி 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 58 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள் ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக பின்வரும் நடைமுறை கள், அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண் டும். அரசின் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்கான ஆய்வுப் பணிகளை மாவட்டக் கல்வி அலுவலர் கள் மேற்கொள்ள வேண்டும்.

நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நான்கு வகைச் சான்றிதழ்களை யும் நிகழாண்டு வரை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்ற பின் னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்த இடங்களில்தான் பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா, கைத்தொழில் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் மாணவர்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிக்காக வழங்கப்பட்ட சொத்துகளின் வருவாயை பராமரிப்பு மானியம் வழங்கும் முன் கணக்கிட வேண்டும். இவற்றை ஆய்வு செய்து சரியாக இருந்தால் மட்டும் பள்ளிகளுக்கான நிதியுதவியை விடுவிக்க வேண்டும். சுயநிதிப் பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.