RTE: இலவச கட்டாயக்கல்வி - தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 فبراير 2023

RTE: இலவச கட்டாயக்கல்வி - தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாயக்கல்வி :மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம். 2023-2024ம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ம் வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும்மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் 20-ந்தேதி தொடங்குகிறது

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான கட்டணத்தை அரசு அந்த பள்ளிகளுக்கு செலுத்துகிறது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மார்ச்) 20- ந்தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு இதற்கான முன்னேற்பாடுகளை செய்துவரும் நிலையில், தனி யார் பள்ளிகள் இந்த திட்டத்தை தொடருவது பற்றி பரிசீலிப் போம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குன ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தயாராகிவருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே நிலுவை கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிக ளுக்குஅரசு விடுவிக்கவேண்டும். அப்படிஇல்லையென்றால், 25சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொட ருவது பற்றி பரிசீலனை செய்யவேண்டிய நிலை வரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.