பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு பிப்.22-இல் மதிப்பெண் பட்டியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 فبراير 2023

பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு பிப்.22-இல் மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு பிப்.22-இல் மதிப்பெண் பட்டியல் Mark list for Plus 1 Ariyar students on Feb 22

பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப் படவுள்ள நிலையில், அதற்கான வெற்று மதிப் பெண் பட்டியல்களை பிப்.22 முதல் தலைமை யாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சே துராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் அரியர் மாணவர்க ளுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

இதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் அரி யர் மாணவர்களுக்கான பிளஸ் 1 செய்முறைத் தேர்வு வெற்று மதிப்பெண் பட்டியல்களை பிப்.22 முதல் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

அதன்பின், பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்மு றைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9-ஆம்தேதிவரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 அரியர் மாணவர்க ளுக்கும் இந்த நாள்களிலேயே செய்முறைத் தேர் வுகள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும், செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவுசெய்த பட்டி யல்களை தொகுத்து அந்தந்த மாவட்ட தேர் வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 11-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது சார்ந்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.