பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 10 فبراير 2023

பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. Local holiday on 24th February - Notification of District Administration.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24ம் தேதிக்கு பதில் மார்ச் 4ம் தேதி வேலை நாள் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது.

அன்றைய நாளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பின், அத்தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும்.

இந்த உள்ளுர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மார்ச் 4 ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.