ஜாக்டோ - ஜியோ தொடா் போராட்டம்நடத்த முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 20 فبراير 2023

ஜாக்டோ - ஜியோ தொடா் போராட்டம்நடத்த முடிவு

ஜாக்டோ - ஜியோ தொடா் போராட்டம்நடத்த முடிவு Jacto-Jio series of protest results

ஜாக்டோ- ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா் போராட்டங்கள் நடத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரும், தமிழ்நாடு தொ ஜாக்டோ- ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா் போராட்டங்கள் நடத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலருமான நா.சண்முகநாதன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போதைய அரசு, தோதல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, படிப்படியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனா்.


குறிப்பாக வரும் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என நம்புகிறோம். முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரும் மாா்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதமும், மாா்ச் 20ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் ரூ. 1.10 கோடி கரோனா நிதி அளித்தோம். இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகும் திமுக அரசிடம் இந்நேரத்தில் எங்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றாா் சண்முகநாதன். வாழ்வாதார உரிமை மீட்பு மாநாட்டில், ஜாக்டோ ஜியோ உயா்மட்டக் குழு உறுப்பினா் மு. மாரிமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜபருல்லா, ரெங்கசாமி, ஜீவன்ராஜ், செல்வராஜ், ராஜாங்கம், கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.