கனமழை எதிரொலி - இன்று (03.02.2023) இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 2 فبراير 2023

கனமழை எதிரொலி - இன்று (03.02.2023) இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :

நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (3.2.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று இலங்கை பகுதியில் கரையை கடந்தது.

இந்த நிலையில் இதன் தாக்கத்தின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை ( 03-02-2020) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.