மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் என்பதற்கான அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 فبراير 2023

மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் என்பதற்கான அரசாணை

துய்க்காத பணியேற்பிடைக் காலம் (Unavailed Joining Time) - ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைக்க 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனும் நிபந்தனை நீக்கம் - அரசாணை வெளியீடு!!! வெளியிடப்பட்ட ஆண்டு 2020

பணி மாறுதல் காரணமாகவோ, பதவி உயர்வுக்கான காரணமாகவோ, ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஈட்டிய விடுப்பை தங்களது கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் அவ்வாறு இது நாள் வரை அதுபோன்ற ஈட்டிய விடுப்பை பணிப் பதிவேட்டில் பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்பதற்கான அரசாணை இணைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது விடுமுறைக்கான கணக்குகளை தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு என அனைத்தையும் எமிஸில் அப்டேட் செய்து வருகிறோம்.

எனவே அவ்வாறு மாறுதலில் வந்தவர்கள் ஈட்டிய விடுப்பு ஐந்து நாட்கள் கணக்கில் சேர்க்காமல் இருந்தால் அதற்கான தபால்களை (மாறுதல் ஆணை, பணிவிடுப்பு ஆணை, பணியாற்ற ஆணை) என்பதை அலுவலகத்தில் கொடுத்து ஈட்டிய விடுப்பை பதிவு செய்த பிறகு எமிசில் அப்டேட் செய்து கொள்ளவும். ஏனென்றால் ஒரு முறை பதிவேற்றி விட்டால் மாற்றம் செய்ய முடியாது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.