தாயின் கருவறைக்கு நிகரானது ஆசிரியரின் வகுப்பறை - நகைச்சுவை நடிகர் தாமு பேச்சு A Teacher's Classroom Is Like a Mother's Womb - Comedian Dhamu
பள்ளிகொண்டாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1,400 மாணவிகள் பயின்று வருகின்றனர்
இந்த நிலையில் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுந்தர், பள்ளியின் மேலாண்மை குழு மற்றும் பேரூராட்சி தலைவர் சுபபிரியா, உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கல்வி விழிப்புணர்வு பேச்சாளரும் நகைச்சுவை நடிகருமான தாமு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவிகளாகிய நீங்கள் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போது அமைதியாக இருந்து பாடத்தை மூளையில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு நீங்கள் பழகிக் கொண்டால் நிச்சயமாக அனைவரும் தேர்ச்சி பெறுவீர்கள். முதலில் உங்கள் மனதில் உள்ள தவறான எண்ணங்களை அகற்றவேண்டும்.
ஆசிரியர்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற ஆசிரியர்களையே காரணம் இந்த ஆண்டு நடைபெறும் பொதுதேர்வில் பயத்தை நீக்கி தேர்வை எதிர்கொண்டால் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது உண்மை என்றார்.
இதனையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் ஆசிரியர் ரீனா நன்றி கூறினார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.