பொதுத் தேர்வு குறித்து CBSE வெளியிட்ட முக்கிய தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 فبراير 2023

பொதுத் தேர்வு குறித்து CBSE வெளியிட்ட முக்கிய தகவல்

பொதுத் தேர்வு குறித்து CBSE வெளியிட்ட முக்கிய தகவல் Important Information Released by CBSE About Public Examination
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் பொதுத் தோ்வுகள் கடந்தவாரம் தொடங்கின.

இந்த நிலையில், பொதுத் தேர்வு குறித்து சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், விடைத்தாள்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்போது பிளாஸ்டிக் பைகளில் போட்டு அனுப்பப்பட வேண்டும். ஆனால் நேரடியாக கொடுக்கும் போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த வேண்டாம்.

தேர்வுகள் தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் வாட்ஸ்ஆப் மூலம் எந்த தகவலையும் யாருக்கும் பகிராது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 பாடங்களுக்கான தோ்வுகளுடன் 10-ஆம் வகுப்புக்கான தோ்வும் தொழில்முனைவோா் பாடத்துக்கான தோ்வுடன் 12-ஆம் வகுப்புக்கு தோ்வும் கடந்த வாரம் தொடங்கியது. பொதுத் தோ்வுகள் 10-ஆம் வகுப்புக்கு மாா்ச் 21-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியிலும் முடிவடைகின்றன.



நாடு முழுவதிலும் உள்ள 7,250 மையங்களிலும் பிற நாடுகளில் உள்ள 26 மையங்களிலும் நடைபெறும் தோ்வுகளில் 38.83 லட்சத்துக்கு அதிகமான மாணவா்கள் பங்கேற்கின்றனா்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.