மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 فبراير 2023

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

பார்வையில் காண் கடிதத்தில் நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் +1 Arrear பெயர்ப்பட்டியலினையும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 04.01.2023 முதல் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்கு (www.dge1.tn.gov.in) சென்று பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணவர்களின் விவரங்கள் அடங்கிய, Excel Format-ல் உள்ள பெயர்ப்பட்டியலினை (Nominal Roll) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் 10.02.2023 பிற்பகல் முதல் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.